பிரதான செய்திகள்

சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சர்களை மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மீண்டும் அழைத்துள்ள நிலையில், நாங்கள் பதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக எந்த தீர்மானங்களும் இதுவரை எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் செயித் அலிஷாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.


ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கம்பரலிய வேலைத்திட்டத்தில் 25 லட்சம் ரூபாவிற்கான வேலைத்திட்டங்களை இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை துறக்கும் போது முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இவ் விடயங்கள் தொடர்பாக பிரதமரை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை மாலை அலரி மாளிகையில் சந்திக்க இருக்கின்றோம்.

இதில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் எல்லை பிரச்சினை, தோப்பூர் உள்ளூராட்சி சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகள் முன்வைத்துள்ளோம்.

Related posts

பிரபல இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்

wpengine

வடமாகாண பட்டதாரிகள் 111 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்

wpengine

உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ச அனுதாபம்.

wpengine