Breaking
Sun. Nov 24th, 2024

வவுனியா மாவட்டத்தில் இளம் ஊடகவியலாளராக பணியாற்றும் பாஸ்கரன் கதீஷன் என்பவரின்  செயற்பாடு சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

அவரது 18 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட காலப்பகுதியில் 16 தடவைகள் இரத்ததானம் வழங்கி இளைஞர் சமூகத்திற்கு முன்னுதாரனமாக திகழ்கின்றார்.

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (blood donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும் .இவ்வாறான இச் செயற்பாட்டின் மூலமே குறித்த ஊடகவியலாளர் சமூக வலைத்தளங்களில் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

இச் செயற்பாட்டினை பாராட்டும் முகமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியினால் பாராட்டு சான்றிதலும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்

குறித்த இளைஞனின் செயற்பாட்டினை முன்னுதாரனமாக அனைவரும் எடுத்துக்கொண்டு இரத்ததானம் வழங்க முன்வரவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்

https://www.facebook.com/baskarankatheeshaan

”இரத்ததானம் செய்வோர். மனிதரில் தெய்வம் போன்றோர்.”

எனது பார்வையில் வன்னியிலிருந்து கஜன்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *