பிரதான செய்திகள்

தலைமன்னாரில் ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகள்

மன்னார் – தலைமன்னார், பிரதான வீதி ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் இருந்து ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகள் மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 12 மூடைகளாக 385 கிலோ கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பீடி சுற்றும் இலைகளைக்கொண்ட பொதிகள் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பொதிகளை மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க பார்வையிட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் குறித்த பொதிகள் யாழ்.சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷத ராஜபக்ஷவும் அரசியலில்

wpengine

காத்தான்குடி பொதுச் சந்தையில் தீ! 3 கடைகள் நாசம்

wpengine

Turkish Parliament Punch-Up (Video)

wpengine