பிரதான செய்திகள்

மூன்று விடயங்களை அடிப்படையாக கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி

தேசிய பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுதல் ஆகிய மூன்று விடயங்களை அடிப்படையாக கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டு வருவதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு முன்னோக்கி செல்ல தொழிற்நுட்ப துறையின் தேவை அவசியம் என்பது மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலேயே அடையாளம் காணப்பட்டது.

இதனடிப்படையில், பாடசாலை பாடநெறியில் தகவல் தொழிற்நுட்பம் சேர்க்கப்பட்டு, கல்வித்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது.

எதிர்வரும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது, மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனரா என்பது குறித்து விசேட கவனம் செலுத்த கட்சி எதிர்பார்த்துள்ளது.

நாட்டில் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மக்கள் திருப்தியாக இருக்கின்றனரா என்பதை கேட்டறிய உள்ளோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் கீழ் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இந்தியா கடற்படையினால் மீட்கப்பட்ட மன்னார் மீனவர்

wpengine

அக்ரம் ரிஸ்கானுக்கு 21 வயதான இளைஞனுக்கு மற்றுமொரு தாயாரும் உரிமை கோரியுள்ளார்.

wpengine

ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும், வடக்கு ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு..!

Maash