பிரதான செய்திகள்

நாயைக் கட்டிப் போடுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன்

தயவுசெய்து எம்மிடம் கன்னத்தில் அறைவாங்குவதற்கு முன்னர் அந்த நாயைக் கட்டிப் போடுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


வெயாங்கொட பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் கூக்குரல் இட்டுத் திரியும் 90இற்றும் அதிகமான பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டவர்கள் எனவும் அதனால் மன அழுத்தங்களுக்கு உட்பட்டதனாலேயே இவ்வாறு தேரர்கள் குரோதத்துடன் காணப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவின் குறித்த கருத்தினால் ஆத்திரமடைந்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த நாட்டில் 2500 வருடங்கள் மதப் போதனை செய்து வருகின்ற பௌத்த பிக்குகளுக்கு செய்ய முடியுமான உயர்ந்த பட்ச இழிவை ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவர் செய்துள்ளார் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னாரில் 2,000 கடலட்டைகள் உயிருடன் மீட்பு!

Editor

அம்பாரை முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது தாக்குதல்! வாய்மூடிய நல்லாட்சி அரசு

wpengine

அஞ்சல், தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்துடன் மக்கள் தொடர்புகொள்ள

wpengine