பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் பதியுதீன் எந்த தவறுகளையும் செய்யவில்லை

அமைச்சர் றிசார்ட் பதியூதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் அவர் எந்த தவறுகளையும் செய்யவில்லை என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுத்ததாக றிசார்ட் பதியூதீன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக தான் இராணுவ தளபதியிடம் விசாரித்ததாகவும் அமைச்சர் அப்படியான அழுத்தங்களை கொடுக்கவில்லை என இராணுவ தளபதி கூறியதாகவும் ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.

இதன் இந்த குற்றச்சாட்டில் இருந்து அமைச்சர் றிசாட் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் தனது வீட்டுக்கு வந்து தான் குற்றம் செய்யவில்லை நிரபராதி எனக் கூறினார் எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ரஞ்சன் இதனை கூறியுள்ளார்.

Related posts

யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் கைது

Maash

தபால் மூல வாக்களிப்பு 4நாட்கள்

wpengine

தலைவர், உப தலைவர் நியமனத்தின் போது ஊழல் மோசடிகள்

wpengine