பிரதான செய்திகள்

நல்லாட்சியில் விடுதலையான ஞானசார தேரர்! முஸ்லிம் சமூகத்திற்கு ஏமாற்றம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையின் பின் வழியாக அவர் வெளியில் சென்றுள்ளார்.

இதன் காரணமாக அவரின் வருகையை எதிர்ப்பார்த்திருந்த பெருந்திரளான மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஞனாசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் கையொப்பமிட்டார்.

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதம் இன்று காலை நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சிற்கு கிடைத்திருந்தது.

தொடர்ந்து, ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான உத்தரவு தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நயாகம் டபிள்யூ.தென்னக்கோன் தெரிவித்திருந்தார்.

இதன்படி சற்று முன்னர் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரை வரவேற்பதற்காக பெருமளவிலான பௌத்த தேரர்கள் உள்ளிட்ட ஞானசாரரின் ஆதரவாளர்கள் வெலிக்கடை சிறைச்சாலையை சூழ்ந்திருந்ததுடன், அதிகளவிலான பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு 19 வருட கடூழிய சிறைத் தண்டனையை 6 வருடங்களில் அனுபவித்து நிறைவு செய்யும் வகையில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உக்கிரமடையும் இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்பு; தினமும் அகதிகளாகும் பாலஸ்தீன மக்கள்

wpengine

மன்னாரில் பதுக்கி வைத்திருந்த ஒரு தொகுமி அங்கர் பால்மா பெட்டிகளை மீட்டுள்ளனர்.

wpengine

மற்றவர்களின் துணை இல்லாமல் உங்களால் வெற்றியடைய முடியாத பல சூழ்நிலைகள்-கோத்தா

wpengine