உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தடுக்க அரசாங்கம் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஜே.வி.பி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
குறித்த பிரேரணை இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளது.
எனினும் இந்த தாக்குதல் விடயத்தில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரை மாத்திரம் குறிவைக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ள ஜேவிபி ஒட்டுமொத்த அரசாங்கமும் இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.