பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொதுமன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளார்
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றுள்ள அவரை விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வெசாக் தினத்தை முன்னிட்டு ஒரு தொகுதி சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு சென்றிருந்தார்.
இதன்போது ஜனாதிபதிக்கும் ஞானசார தேரரும் இடையில் சுமார் 45 நிமிடங்கள் வரையில் இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது நாட்டின் தீவிரவாத செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் விரிவாக கூறிய தேரர் , தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராக அனுமதி கோரினார்.
அதில் சாட்சியமளிக்க ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார் ஜனாதிபதி.
சட்ட மா அதிபர் திணைக்கள ஆலோசனை கிடைத்த பின்னர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளார்.