பிரதான செய்திகள்

பேருவளை பகுதியில் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பேருவளை பகுதியில் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.
பேருவளை, மரதான மஸ்ஜிதுல் அப்ரார் ஜூம்மா பள்ளியில் இன்று இடம்பெற்ற ஜூம்மா தொழுகைக்குப் பின்னர் மக்கள் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தது.

இதனிடையே, ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று சில வாரங்கள் கடந்த நிலையில், முஸ்லிம் மக்கள் மீது வடமேல் மாகாணம் உட்பட்ட சில பகுதிகளில் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதையடுத்து இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளும், வன்முறையாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன.

இவ்வாறிருக்கையில், முஸ்லிம் மக்கள் அடிப்படைவாதத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரபிக் கல்லூரி மாணவனை தாக்கிய அதிபர்,மௌலவி

wpengine

வவுனியாவில் நாளை கடையடைப்பு இல்லை இராஜலிங்கம்

wpengine

இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

Editor