(நாச்சியாதீவு பர்வீன்)
கடந்த காலங்களில் மட்டு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களின் பத்திரிகை அறிக்கைகளும்,கூற்றுக்களும் அப்பட்டமான இனவாதமாகவும், சிங்கள,முஸ்லிம் மக்களை புண்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. அடி மட்ட அரசியல் அறிவு உள்ள ஒருவன் கூட இன,மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தி அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும்,புரிந்துணர்வு
யோகேஸ்வரன் எம்.பி போன்றோர் கடந்த காலங்களில் அப்பாவி தமிழ் இளைஞ்ஞர்களை பிழையாக வழிநடத்தியதன் விளைவை இப்போது அந்த சமூகம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறது. மீண்டும் சகோதர தமிழ் சமூகத்தினை இக்கட்டான ஒரு சூழ்நிலைக்குள் தள்ளி விட்டு இந்திய இந்துத்துவ அமைப்புக்களிடம் இருந்து பெருந்தொகைப் பணத்தை சுருட்டிக்கொண்டு வெளிநாட்டில் குடியுரிமை பெற்றுச்செல்லவிருப்பதாக யோகேஸ்வரன் எம்.பி. பற்றிய ஒரு தகவல் கசிந்துள்ளது. இனங்களை மூட்டி விட்டு அதில் குளிர்காயும் தர்மத்தை இந்து மதம் உங்களுக்கு கற்றுத் தந்துள்ளதா? ஒரு இனத்தை அடுத்த இனங்களுடன் மூட்டிவிட்டு புலம்பெயர நினைப்பது முட்டாள்தனமான செயற்பாடாகும்.
> நீங்கள் வெளிநாட்டில் குடியுரிமை பெற தனது இனத்தை படுகுழியில் தள்ளிவிட நினைக்கின்ற உங்களது சுயநலப்போக்கினை பாராளமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மாற்றிக்கொள்ள வேண்டும்,அப்பாவி மக்களை இனியும் இன ரீதியாக பிரித்து அரசாங்கத்துடன் மோதவைக்கின்ற அந்த முட்டாள் தனத்தை மேற்கொள்வாராயின் இன்னும் ஒரு பேரழிவை இந்த நாடு எதிர் கொள்ளும் அதில் மீண்டும் அப்பாவித்தமிழினம் இன்னும் கோரமான அழிவினை சந்திக்க நேரிடலாம்.
> ஒரு இந்து மத குரு பொய்யும்,புரட்டும்,துவேசமும் கொண்ட நபராக நாம் அவதானிப்பது இது முதற்தடவையல்ல ஆனால் அடுத்த சமூகத்தை வெறியுடன் நோக்குகின்ற ஒரு மத குருவை அவதானிப்பது இதுதான் முதற்தடவை.நல்ல பண்பாட்டினையும்,நல்லொழுக்கத்தி
தன்னால் பிள்ளைப்பெற முடியாது என்பதற்காக அடுத்தவனையும் பிள்ளை பெறக்கூடாது என்பதானது நியாயமான,அங்கீகரிக்க முடியாத கூற்றாகும். முன்னுக்கு பின் முரணாக கருத்துக்கூறி தமிழ்,முஸ்லிம் உறவுக்குள் பகைமையையும்,சிங்கள தமிழ் உறவுக்குள் இன்னும் சிக்கல்களையும் உண்டு பண்ண பாராளமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் முனைவதை தமிழ் புத்தி ஜீவிகள் அவதானத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த யுத்த காலங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகள் இந்த நல்லாட்சியில் தமக்கான நிவாரணங்களையும்,நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளையும்,அவர்கள் இழந்த சொத்துக்கள்,காணிகள் போன்ற இன்னோரன்ன விடயங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் முஸ்லிம்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. மாறாக தமிழ் மொழியை தாய் மொழியாக நாம் கொண்டவர்கள் என்பதற்காய் பேரினவாதிகளாலும், தமிழீழத்தை நாம் ஆதரிக்கவில்லை என்பதற்காக பாசிஸ புலிகளாலும் முஸ்லிம் சமூகம் பட்ட துன்பங்களையும்,துயரங்களையும்,
வடமாகாணத்தில் புலிகளின் இனரீதியான சுத்திகரிப்பும்,கிழக்கிலே காத்தான்குடி,ஏறாவூர், பள்ளிவாசலில் தொழுது கொண்டு இருந்த அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்து நியாயம் பேசும் சீனித்தம்பி யோகேஸ்வரன் போன்றோர் இப்போது முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுக்கப் போகிறாராம் என்பதே வேடிக்கையான செய்தியாக உள்ளது.
முஸ்லிம்கள் இனவாதிகள்,மதமாற்றம் செய்கிறார்கள்,முஸ்லிம்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்ற பாராளமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் கருத்துக்கள் பொதுபலசேனாவை விடவும் துவேசம் மிக்கவை. வடக்கிலும்,கிழக்கிலும் மட்டுமே தமிழர்கள் வாழ்வதாக ஒரு பிரமையில் அவர் பிதற்றுகிறாரே தவிர வடகிழக்கைத் தாண்டி வாழ்கின்ற தமிழ் மக்கள் பற்றிய பொதுப்படையான அவரது அறிவு மட்டம் கழித்தல் குறியில் இருப்பதை உணர்த்துகிறது.
உதாரணமாக எனது மாவட்டம் அநுராதபுரம் இங்கே சுமார் 14,000 தமிழர்கள் சிங்களவர்களுடனும்,முஸ்லிம்களு
இப்படி பல மாவட்டங்களிலும் தமிழர்கள் சொற்ப தொகையினர் வாழ்கின்றனர். யோகேஸ்வரனின் அறிவற்ற பேச்சுக்கள் இந்த மக்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அவர்களை சந்தேகமாக பார்க்கின்ற நிலையை தோற்றுவிக்கும். சுயநலவாதியாக,குரோதத்துடன் செயற்படும் சீனித்தம்பி யோகேஸ்வரன் போன்றோர் மூவின மக்களினதும் பரஸ்பர ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் கருத்துக்களை நிறுத்தவேண்டும்.
நல்லாட்சியை அவ்வப்போது விமர்சித்து நல்லாட்சிக்கு எதிரான மாற்று அணியுடன் சீ.யோகேஸ்வரன் இணைய இருப்பதாகவும் கதைகள் பரவலாக உலா வருகின்றன.
எது எப்படியோ முஸ்லிம் தமிழ் உறவு பிளவுபடக்கூடாது. தமிழர்கள்களுக்கும்,முஸ்லிம்களு
கடந்த யுத்த காலங்களில் எத்துனை தமிழ் குடும்பங்களை எங்கள் வீடுகளில் வைத்து காப்பாற்றி அவர்களை அவர்களது இனபந்துக்களோடு சேர்த்துள்ளோம் என்பதை இனவாதியாக செயற்படும் சீனித்தம்பி யோகேஸ்வரன் போன்றோருக்கு எங்கே தெரியப்போகிறது.