சமூக வலைத்தளங்களினூடாக இனவாத கருத்துக்களை பதிவிட்டு இன நல்லிணக்கத்தை சீரழிக்கும் வகையில் நடந்துகொண்ட ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சிலாபத்தில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை தோற்றுவித்து அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் குறித்த நபர் கருத்தினை பதிவேற்றியுள்ளதாக தெரிவித்து, குறித்த கருத்து தொடர்பில் சிலாபம் நகரில் பொதுமக்கள் மத்தியில் சிறு முறுகல் நிலை தோன்றியுள்ளது.
இதனால் அப் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அங்கு விரைந்த இராணுவத்தினரும், பொலிஸாரும் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனனர்.
இந்நிலையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து குறித்த முறுகல் நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் உடன் அமுலாகும் வகையில் நாளை காலை 6 மணி வரை குறித்த பகுதியில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.