நாட்டின் அனைத்து சமூகங்களுக்கும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டு வருவதில் நாம் முன்பாதுகாப்புடன் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று ஏனைய சமூகத்தைச் சேர்ந்த மக்களும் குறிப்பாக அரசாங்கமும் எதிர்பார்க்கின்றனர் என முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கைபொறுப்பாளர்கள் தமது மஸ்ஜித்களில் இடம்பெறும் அனைத்து ஜூம்ஆ உரைகள் மற்றும் ஏனைய உரைகளையும் ஒலிப்பதிவு செய்து அவற்றை முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் எந்தவொரு கூட்டத்திற்கும் அல்லது ஜமாத்திற்கும் எவ்வித்திலுமான வெறுப்பூட்டுகின்ற அல்லது தீவிரவாதமுள்ள கருத்துக்களை ஊக்கப்படுத்துவதற்கோ அல்லது பரப்புவதற்கோ இடமளிக்கவோ, அனுமதியளிக்கவோ கூடாது. மீறி செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்ற நபர்களின் காட்டு மிராண்டித்தனமான பயங்கரவாத செயற்பாடுகளை இலங்கையின் முழு முஸ்லிம் சமூகத்தின் சார்பிலும் முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சு வன்மையாகக் கண்டிக்கின்றது.
இஸ்லாத்தில் பயங்கரவாதத்திற்கோ அல்லது மற்றொரு மனிதனைக் கொலை செய்வதற்கோ எவ்விதமான அனுமதியும் இல்லை. இஸ்லாமிய கோட்பாடுகளின் படி அப்பாவி பொது மக்களை கொலை செய்வதானது முழு மனித சமூகத்தையும் கொலை செய்வதற்கு சமமானதாகும்.
நாட்டில் தற்போது நிலவுகின்ற சூழ்நிலையில் முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சு பள்ளிவாசல்களின் அனைத்து நம்பிக்கை பொறுப்பாளர்களுக்கும் சில விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்துமாறு கோரியுள்ளது.
எந்தவொரு கூட்டத்திற்கும் அல்லது ஜமாத்திற்கும் எவ்வித்திலுமான வெறுப்பூட்டுகின்ற அல்லது தீவிரவாதமுள்ள கருத்துக்களை ஊக்கப்படுத்துவதற்கோ அல்லது பரப்புவதற்கோ இடமளிக்கவோ, அனுமதியளிக்கவோ கூடாது.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் பூரண ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இதன் பிரகாரம் நம்பிக்கை பொறுப்பாளர்கள் சபை அங்கத்தவர்கள் முழுமையான பொறுப்புடனும் கவனத்துடனும் செயற்பட வேண்டும்.
முஸ்லிம் சமூத்தினுள்ளும் ஏனைய ஏனைய சமூத்திற்கிடையிலும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும். ஏனைய மதங்களைச் சேர்ந்த மதகுருமார்களுடன் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் குறித்த விடயங்களை முஸ்லிம்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.