பள்ளிவாசல்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரி எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசல்களுக்கு வெளியில் கேட்கும் வகையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது என சகல பள்ளிவாசல்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ரமழான் நோன்பினை நிறைவு செய்த பின்னர் இரவில் இடம்பெறும் மத நடவடிக்கைகளின் நேரத்தை குறைத்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.