பிரதான செய்திகள்

முஸ்லிம்கள் இந்த கட்டத்தில் நிதானமாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்

நாட்டிலுள்ள அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என அகில இலங்கை ஜமியத்துல் உலமா அமைப்பின் தலைவர் ரிஸ்வி முப்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
நீர்கொழும்பில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,
ரமழான் ஆரம்பமாகும் இந்த கட்டத்தில் நிதானமாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகளிடமும் கோருகிறேன்.

இதேவேளை, நாட்டில் காணப்படுகின்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீர்கொழும்பில் நேற்று மாலை இரு தரப்பினரிடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

இதன்போது சில வாகனங்கள் எரியூட்டப்பட்டிருந்ததுடன், பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் இன்னும் திறந்து வைக்கப்படாத தாய்,சேய் நிலையம்

wpengine

சற்றுமுன்பு சுந்தரம் அருமைநாயகத்தையும், ரூபவதி கேதீஸ்வரனையும் தொடர்புகொண்ட மஹிந்த

wpengine

ஸ்ரீகாந்தா வெளியிட்ட கருத்து தொடர்பில் ரெஜினோல்ட் குரே

wpengine