தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

வெளிநாட்டில் வேலைசெய்வோருக்கு புதிய தொழில்நூற்பம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சால் வெளிநாடுகளில் வேலைசெய்பவர்களுக்காக புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் அடிப்படையில் வெளிநாடுகளில் வேலைசெய்பவர்களுக்காக விசேட செயலி (App) ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த செயலியின் மூலம் வெளிநாடுகளில் வேலைசெய்பவர்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் அறிந்துகொள்ள முடியும்.

இந்நிலையில் இலங்கையில் முன்னணி தொலைத்தொடர்பாடல் நிறுவனமொன்றுடன் இணைந்து, வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்காக பிரத்தியேக சிம் (Sim) அட்டைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு தொலைபேசி கட்டணத்திற்கு அமைவாகவே, இலங்கையிலுள்ள தமது உறவினர்களுடன் அவர்கள் உரையாட முடியும்.

Related posts

வெளிநாடு செல்ல பணம் இல்லாமையினால் தூக்கிட்டு மரணமான யாழ். இலைஞன்.

Maash

அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் மௌனம்!

wpengine

அடுத்த மாதம் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை….!!!

Maash