பிரதான செய்திகள்

இஸ்லாமிய சமய பாடங்களை ஒழுங்குறுத்துவதற்கான புதிய சட்டம்

மத்ரஸா கல்வி நிறுவனங்களை ஒழுங்குறுத்துவதற்கு தேவையான சட்ட வரைபுகளை மேற்கொண்டுவருகின்றோம் என தபால் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் ஏ,எச்.எம்.ஹலீம் தெரிவித்தார்.


தபால் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இஸ்லாமிய சமய பாடங்களை ஒழுங்குறுத்துவதற்கான புதிய சட்டங்களை தயார் செய்வதன் அவசியம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன மற்றும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஆகியோருடன் கலந்துரையாடினேன்.

மத்தரசா என்று அழைக்கப்படுகின்ற கல்வி நிறுவனங்களை பரிசீலனை செய்வது தொடர்பாக முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கு உரித்தான சட்டரீதியிலான அதிகாரங்கள் இல்லை.

அதனால் இந்த நிறுவனங்களை கண்காணிப்புச்செய்வதை இலகு படுத்தும்வகையில் 278 நிறுவனங்கள் மேற்படி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

அவற்றின் பாடவிதானங்கள் தொடர்பில் பொதுவான முறையியல் மற்றும் ஒழுங்குறுத்தல்களை தயார் செய்வதற்கு கல்வி அமைச்சின் இணக்கப்பாட்டை பெற்று அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார்.

Related posts

கடந்த அரசாங்கங்கள்மீது பழிபோட்டு குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசாங்கம்..!

Maash

வாக்குகளுக்காக மட்டுமே எமது சமூகத்தைப் பயன்படுத்துகின்றனர்.

wpengine

அமைச்சர் றிசாத்தின் வேண்டுகோளை ஏற்று கரையோரப் பாதுகாப்புப் பிரதிப்பணிப்பாளர் ஒலுவில் பகுதியில்

wpengine