பிரதான செய்திகள்

இன்று மன்னாரில் பல இடங்களில் சோதனை

அடம்பன் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு கிராமத்தில் இன்று காலை 6 மணி முதல் முப்படையினர் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
விடத்தல் தீவு பகுதியில் நேற்று மாலை டெட்டனேட்டர் குச்சிகளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையிலே முப்படையினர் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

வீடுகளுக்குச் சென்ற படையினர் வீடுகளை முழுமையாக சோதனையிட்டதோடு, வீட்டில் உள்ளவர்களின் விபரங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும் விடத்தல் தீவு கிராத்தில் உள்ள பிரதான வீதிகளில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் கடும் சோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட விடத்தல் தீவைச் சேர்ந்த 4 பேர் இராணுவத்தினரினால் அடம்பன் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, விசாரணைகளின் பின்னர் குறித்த 4 சந்தேக நபர்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் பிரதான பாலத்தினூடாக உள்வரும், வெளிச்செல்லும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு, மக்களின் அடையாள அட்டைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

மன்னார் நகரில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் படையினர் இன்று காலை முதல் மதியம் வரை வீடு வீடாகச் சென்று கடும் சோதனைகளையும், தேடுதல்களையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்கட்சி தலைவராக மஹிந்த! அதிரடி நடவடிக்கை விரைவில்

wpengine

மண் குதி(ர்)ரைகளை நம்பி ஆற்றில் இறங்கும் அதாவுல்லா!

wpengine

நடிகை பிரியங்கா சோப்ரா உட்பட 112 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்!

wpengine