உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை ராஜபக்சக்கள் மேற்கொண்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கி வடக்கு மக்கள் வாக்களிப்பதனை தவிர்க்கச் செய்தவர்கள் ராஜபக்சக்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவிதமாக இந்த தாக்குதல்களின் பின்னணியிலும் ராஜபக்சக்கள் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்ப காலங்களில் இந்த தௌஹீத் ஜமாத் அமைப்பு உருவாவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டமை, இந்த அமைப்பின் சில புலனாய்வுப் பிரிவு என்ற அடிப்படையில் அரசாங்கத்தின் சம்பளம் பெற்றுக் கொண்டமை என்பன குறித்து விசாரணை செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள அரசியல் சூழ்ச்சித் திட்டம் பற்றி அம்பலப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.