Breaking
Sun. Nov 24th, 2024

கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் 3 பெரும் வெடிச்சத்தங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த வெடிப்பு தற்கொலை குண்டுத்தாக்குதலாக இருக்கலாமென படைத்தரப்பு சந்தேகிக்கின்றது.

தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் தற்கொலை அங்கிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையாக இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு குழுவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே சந்தேக குழுவினருடன் பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை தேசிய உளவுத்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைவாக சம்மாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றினை சுற்றி வளைத்து, அதிரடிப் படையினரும் சி.ஐ.டி.ல் எனப்படும் குற்றப் புலனயவுப் பிரிவினரும் அம்பாறை பொலிஸ் அத்தியட்சர் அலுவலகமும் முன்னெடுத்த விஷேட நடவடிக்கையிலேயே இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.

தேசிய உளவுத்துறைக்கு , சம்மாந்துறையில் உள்ள வீட்டில் தற்கொலை குண்டு அங்கிகள் மற்றும் குண்டுகள் தயாரிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்தே அந்த தகவல் சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அவர்களது ஆலோசனை பிரகாரம் இந்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விஷேட அதிரடிப் படை, அம்பாறை பொலிஸ் அத்தியட்சர் அலுவலகம் மற்றும் கிழக்கு இராணுவ கட்டளை மையம் ஆகியவற்றின் உதவியும் பெறப்பட்டுள்ளது.

இதன்போது அவ் வீட்டிலிருந்து குண்டு தயரிக்கப் பயன்படுத்தப்படும் சிறிய உருளைகள் ஒரு இலட்சமும், 150 ஜெலட் நைட் கூறுகளும், மின் கலங்கள், வயர்கள், அமில வகைகள் என ஏராளமான வெடிபொருள் மூலக் கூறுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதனைவிட ஒரு மடிக்கணினி மற்றும் ட்ரோன் கமராவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை அதே வீட்டில் இருந்து இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தககுதல்களுக்கு பொறுப்பேற்று ஐ.எஸ். ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட புகைப்படம் மற்றும் காணொளயில் உள்ள நபர்கள் அணிந்திருக்கும் முகத்தை மறைத்திருக்கும் ஆடைகளை ஒத்த ஆடைத் தொகுதிகள் மற்றும் அப்படங்களின் பின்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதையை ( பெனர்) ஒத்த பதாதையையும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *