Breaking
Sat. Nov 23rd, 2024

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி இடம்பெற்ற 1982ம் ஆண்டு சேவையில் இருந்து நிறுத்தப்பட்டமை தொடர்பில் நவ சமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவுக்கு நஸ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
அக் காலப் பகுதியில் அரசுக்கு எதிராக எதிர்ப்பு வௌியிட்டமை தொடர்பில் பேராசிரியர் விக்ரமபாகு கருணாரத்ன பேராதனை பல்கலைக்கழத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பதவியை இழந்தார்.

எனினும் குறித்த பதவி அவருக்கு மீளவும் கிடைக்கப் பெறவில்லை. இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் அவரது நிலைவையிலுள்ள சம்பளத்துடன் ஓய்வு பெறும் வரை சேவையில் இருந்ததாக கருதி, 60 இலட்சம் ரூபா பணம் நஸ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து ஜனாதிபதிக்கு குறிப்பிட்டிருந்ததாகவும் இதனையடுத்து உடனடியாக ஜனாதிபதி தனக்கு இவற்றை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *