பிரதான செய்திகள்

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஹாஜியார் உணவக மகன்

மட்டக்களப்பு ஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் தஸ்லீம், மற்றும் மூவர் இன்று மாலை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சீயோன் தேவாலய குண்டுவெடிப்பு தொடர்பாக புலன் விசாரணை நடத்தும், குற்றவிசாரணை பிரிவினரால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்குள், தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி முகமட் காசிம் முகமட் றில்வான் என்பவன் குண்டை வெடிக்க வைத்து, 29 பேரை கொன்றான்.

தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவனிற்கு உதவியவர்கள் தொடர்பாக புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த விசாரணைகளிலேயே, நால்வர் கைதாகியுள்ளனர்.

தற்கொலைதாரிகளிற்கான வாகன ஏற்பாடுகளை செய்தார்கள் என்ற சந்தேகத்திலேயே நால்வர் கைதாகினர். கைதானவர்களில் ஒருவர் வாகனம் வாங்கி விற்பதை தொழிலாக கொண்டவர் என்றும் தெரிகிறது.

கொழும்பிலிருந்து சென்ற விசேட புலனாய்வுகுழுவினாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

புத்தளம்,மன்னார் ,முல்லைத்தீவு கரையோர எச்சரிக்கை!

wpengine

மஹிந்த ராஜபக்சவின் ஊடகப்பேச்சாளராக ரவீந்திர மனோஜ் கமகே நியமனம்

Editor

இறைச்சி மாடுகள் விற்க தடை: மோடி அரசுக்கு எதிராக ஒன்றுசேரும் தமிழக கட்சிகள்

wpengine