Breaking
Sun. Nov 24th, 2024

கொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிரேன்ட் ஹொட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள செல்வந்த வர்த்தகரான 65 வயதான அல்ஹாஜ் யூசுப் மொஹமட் இப்ராஹிம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டவர் என தெரியவந்துள்ளது.
கடந்த ஞாயிற்று கிழக்கு நடந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

அதே வேளை மொஹமட் இப்ராஹிம், கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப்பட்டியலில் இடம்பெற்றிருந்ததாக கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்திருந்தார்.

அத்துடன் மொஹமட் இப்ராஹிம் , அமைச்சர் றிசார்ட் பதியூதீனுடன் காணப்படும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் அந்த புகைப்படம் 8 வருடங்களுக்கு முன்னர் நடந்த வர்த்தகர்களுடன் சந்திப்பில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனிடையே சந்தேக நபரான மொஹமட் இப்ராஹிமின் இளைய புதல்வரான இஸ்மையில் அஹமட் இப்ராஹிம் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிரேன்ட் ஆகிய ஹொட்டல்களில் தற்கொலை தாக்குதல்களை நடத்தியது இப்ராஹிமின் இரண்டு மகன்களான இம்சான் அஹமட் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் அஹமட் இப்ராஹிம் என தெரியவந்துள்ளது.

மொஹமட் இப்ராஹிமின் மற்றுமொரு மகனை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இஜாஸ் அஹமட் இப்ராஹிம் என்பவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

தெமட்டகொடை மஹவில வீதியில் உள்ள ஆடம்பர இரண்டு மாடி வீட்டை சோதனையிட்ட போது இந்த நபர் கைது செய்யப்பட்டார்.

இந்த வீடு மொஹமட் இப்ராஹிமுக்கு சொந்தமானது என கிடைத்த புலனாய்வு தகவலை அடுத்து, பாதுகாப்பு தரப்பினர் வீட்டை சோதனையிட்ட போது அங்கு குண்டு வெடித்தது. அதில் மூன்று பொலிஸார் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து அதிரடிப்படையினர் வீட்டின் இரண்டாவது மாடியில் ஏறி சோதனையிட்ட போது, அப்போதும் குண்டு ஒன்று வெடித்தது.

இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த பாத்திமா ஜிப்ரி மற்றும் இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்டனர்.

வீட்டின் கீழ் மாடியில் இருந்து ரிமோர்ட் கொன்றோல் மூலம் குண்டு வெடிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *