மாகந்துரே மதூஷை 4 ஆண்டுகளுக்கு முன்னர் தான் சந்தித்ததாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரின் பொறுப்பில் உள்ள, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரும், போதைப்பொருள் வர்த்தகமான கஞ்சிபான இம்ரான் தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதேநேரம், முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பிலும் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் கஞ்சிபான இம்ரானிடம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட நிலையில், நேற்று இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட இரண்டு பேரில் ஒருவர், குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த பியல் புஷ்பகுமார என்ற 5 வயதுடையவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவருடன், நேற்று நாடுகடத்தப்பட்ட 22 வயதுடைய மொஹமட் அப்ரிடி மொஹமட், விசாரணைகளின் பின்னர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினால் கைதுசெய்யப்பட்டார்.
அவர், தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபான இம்ரானின் மனைவியின் சகோதரியின் மகள் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட 31 பேரில் 23பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுள் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.