Breaking
Sun. Nov 24th, 2024

மன்னார் மனித புதைகுழியில் மேலதிகமாக அடையாளப்படுத்தப்பட்டுஅப்புறப்படுத்தப்படாமல் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் அனைத்தும் நேற்று மாலை திடீர் என முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23 திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்பின்னர் மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது தற்காலிகமாகநிறுத்தப்பட்டதோடு, களனி பல்கலைக்கழக பேராசியர் ராஜ் சோம தேவ அவர்களின்அறிக்கையானது மூன்று மாத காலப்பகுதியில் சமர்பிக்கும் படியாக கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை குறித்த மனித புதை குழியானதுமுழுமையாக சீர் செய்யப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு மேலதிகமாக காணப்பட்டஅனைத்து மனித எலும்புக்கூடுகளும் புதை குழியில் இருந்து அவசரமாக முழுமையாக அப்பறப்படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் குறித்த மனித புதை குழியானது சிறிய அளவில் அகலப்படுத்தப்பட்டுமீண்டும் பொலித்தீன் மற்றும் பாதுகாப்பாக மூன்று மாத காலப்பகுதிக்குமூடப்படவுள்ளது.

இந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் பேராசிரியர் ராஜ் சோம தேவவினால் மன்னார்மனித புதைகுழி தொடர்பாகவும் மண் படைகள் தொடர்பாகவும் அறிக்கைதயாரிக்கப்படவுள்ளது.

நேற்று மாலை இடம் பெற்ற சீரமைக்கும் பணியில் சட்ட வைத்தியஅதிகாரி சமிந்த ராஜபக்ஸ, பேராசிரியர் ராஜ் சோம தேவ உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த பணியை மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா நேரடியாக சென்று பார்வையிட்டமைகுறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *