பிரதான செய்திகள்

மன்னார்,வவுனியா வீதியில் மரத்தளபாட விற்பனை நிலையத்தில் தீ

வவுனியாவில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
வவுனியா, மன்னார் வீதியில் குருமன்காடு பகுதியை அண்மித்ததாக உள்ள மரத்தளபாட விற்பனை நிலையத்தில் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் முயற்சியில் நகரசபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மரத்தளபாட விற்பனை நிலையத்தில் மரத்தளபாடங்கள், வெட்டுமரம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய இயந்திர சாதனங்கள் இருந்த நிலையிலேயே அவை எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கும் வியாபார நிலைய உரிமையாளர் அவற்றின் பெறுமதி 50 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என தெரிவித்துள்ளார்.

தீ விபத்து ஏற்பட்டமையினால் வவுனியா – மன்னார் வீதியூடான போக்குவரத்து சுமார்ஒரு மணிநேரம் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது.

இருப்பினும் போக்குவரத்துபொலிசார் நிலமையை சீர் செய்தனர்.

குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரைகண்டுபிடிக்கப்படாத நிலையில் இது குறித்து வவுனியா பொலிசார் விசாரணைகளைமுன்னெடுத்துள்ளனர்.

Related posts

அரசாங்கம் மக்களைப் பற்றி கரிசனை கொள்ளவில்லை முஜுப்

wpengine

சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்த அரச ஊழியர்! விசாரணை

wpengine

முஸ்லிம்களின் சாப்பாட்டு கடை மீது தழிழ் இளைஞர்கள் தாக்குதல்! பல சேதம்

wpengine