Breaking
Sun. Nov 24th, 2024

மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கட்டுபாட்டில் உள்ள மத்தி வங்கியில் சமுர்த்தி பயனாளிகள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் புத்தாண்டு வார சேமிப்பு பணமாக ஒவ்வெரு சமுர்த்தி பயனாளிகளிடம் 5000/-ரூபாவுக்கு மேற்பட்ட தொகையினை வசூலிக்குமாறு வங்கி முகாமையாளர் ,சமுர்த்தி உத்தியோகத்தர்களிடமும் மற்றும் சங்க தலைவர்களிடமும் கட்டாயமான முறையில்  சேமிப்புகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இதன் காரணமாக 1500/-ரூபா பணம் பெறும் தனி நபர்கள் அல்லது விதவைகள் இந்த பணங்களை செலுத்த முடியாமல் மிகவும் கஷ்டத்திலும்,கவலையிலும்,மன வேதனையிலும் இருப்பதாக  அறியமுடிகின்றன.

வங்கி முகாமையாளர்கள் அதிகமான பணங்களை சேமிப்பு செய்து ஏனைய  வங்கிகளில் முதலீடுகளை மேற்கொண்டு அதிகமான இலாபங்களை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் அப்பாவி ஏழை சமுர்த்தி பயனாளிகளிடம் பணங்களை வசூலிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள்.

மத்தி வங்கியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களை பலவந்தமான முறையில் பணங்களை வசூலிப்பு செய்யுமாறு கட்டாய கோரியினையும் வங்கி முகாமையாளர் கோரிக்கையினை வழங்கியுள்ளார்.

அதே போன்று வங்கியில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மீது அநாகரிகமான முறையிலும்,அடக்கு முறையிலும் வங்கி முகாமையாளர் தொடராக நடந்து வருகின்றார் எனவும் அறியமுடிகின்றன.

கடந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல முகாமையாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட போதும் இந்த மத்தி வங்கி முகாமையாளருக்கு இன்னும் இடமாற்றம் வழங்கவில்லை எனவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

அப்பாவி சமுர்த்தி பயனாளிகளின் கஷ்டம்,வறுமை, வரட்சி போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு புத்தாண்டு சேமிப்பு தொடர்பான நடைமுறையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்,சமுர்த்தி உதவி ஆணையாளர் கவனம் செலுத்துமாறு பிரதேச பயனாளிகள் கோரிக்கையினை விடுத்துள்ளார்கள்.

இது போன்று அப்பாவி மக்களிடம் கடுமையான முறையில் நடாந்துகொள்ளும் சமுர்த்தி முகாமையாளர்கள் மீது மக்கள் பிரநிதிகள்  அதிக கவனம் செலுத்த வேண்டும். எனவும் தெரிவிக்கின்றனர்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *