மன்னார் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டில் கால் ஆண்டில் வவுனியாவில் 26 பேர் பாதிப்பு என்று சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எலிகள் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் மூலமாகவே லேப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் நோய் பரவுகிறது.
இலங்கையில் ஏனைய மாவட்டங்களில் இந்த நோயின் தாக்கம் பரவலாகக் காப்பட்டாலும் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் சற்றுக் குறைவானதாகவே காணப்படுகிறது.
எலிக்காய்ச்சலுக்கு காரணமான கிருமிகள் எலிகள் மற்றும் பெருச்சாளிகள் மூலம் பரவுவதுதான் அதிகம்.
எனினும் ஆடு, மாடு, நாய், பூனை, பன்றி, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடமும் இந்த கிருமிகள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றின் சிறுநீரில் இந்தக் கிருமிகள் வெளியேறுவது வழக்கம். எனவே கனமழை பெய்யும் இடங்களில் வடிகால் அமைப்பு சரியில்லை என்றால், மழை நீர் வடிய வழியில்லாமல் தெருக்களில் தேங்கும்.
வீட்டில் வாழும் எலிகள் அந்த நீருக்கு வரும். அப்போது எலிகளின் சிறுநீர் அதில் கலந்துவிடும்.
எனவே பாதணி அணியாமல் தேங்கிய தண்ணீரிலும், அந்த நீர் பட்ட மண் சகதியிலும் மக்கள் நடக்கும்போது பாதங்கள் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் புகுந்துவிடும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மக்கள் சுத்தமான நீரையும், சுத்தமான நீரால் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் உட்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.