Breaking
Sun. Nov 24th, 2024

வடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியாவிலுள்ள காஞ்சிரமோட்டை கிராமத்தில் புதையலுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைதாகியுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் சென்ற சந்தேகநபர்களே நேற்று இரவு புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சந்தேகநபர்கள் நால்வரும் காஞ்சிராமோட்டை காட்டு பகுதியில் பெக்கோ இயந்திரம் மூலம் புதையல் தோண்டியுள்ளனர்.

இதன்போது புராதன கால புத்தர் சிலை, கல்வெட்டு, கலசம், விளக்கு மற்றும் மலையாள மாந்திரிக புத்தகங்கள் என்பன கிடைத்துள்ளன.

அவற்றை சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் கடத்தி செல்ல முற்பட்டுள்ளனர். இந்த சமயத்தில் இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த புளியங்குளம் பொலிஸார் அவர்களை கைது செய்து, புதையல் பொருட்கள் மற்றும் முச்சக்கரவண்டி என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 35, 35, 40, 42 வயதுகளை உடைய தலவாக்கலை, திருகோணமலை, மட்டக்களப்பு, நெடுங்கேணி போன்ற இடங்களை சேர்ந்த நான்கு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

அத்துடன் புதையல் பொருட்கள் தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளன.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *