மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து நேற்று அதிகாலை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் பகுதியில் மேற்கொண்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போது 42 கிலோ 50 கிராம் கேரள கஞ்சாப்பொதிகளுடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கேரளக்கஞ்சா சுமார் 42 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வருகின்றது.
வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையக அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட குறித்த நடவடிக்கையின் போதே கேரள கஞ்சாப்பொதி மீட்கப்பட்டுள்ளது.
மன்னார், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.