பிரதான செய்திகள்

தற்போதைய அரசாங்கம் செய்த எந்த அபிவிருத்தி திட்டத்தையும் மக்கள் காணவில்லை

தனது அரசாங்கம் பதவியில் இருந்திருக்குமாயின் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணித்து முடிக்கப்பட்டிருக்கும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பணியாற்ற முடியாத காரணத்தினால், ஜனாதிபதி தமது தரப்புடன் இணைந்துக்கொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெயங்கொடையில் புதிய வார சந்தையை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் செய்த எந்த அபிவிருத்தி திட்டத்தையும் மக்கள் காணவில்லை. இதனை ஜனாதிபதி புரிந்துக்கொண்டார். இதனால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் பயணிக்க முடியாது என்பதை உணர்ந்து எம்முடன் இணைந்துக்கொண்டார்.

மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்தும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போன்று மாகாண சபைத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கம் தோல்வியடையும்.

வடக்கு மாகாண சபைக்கு அதிகாரங்களை கோருகின்றனர். மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்து விட்டது. ஆனால், தேர்தலை நடத்துமாறு ஒரு வார்த்தையை கூட பேசுவதில்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Related posts

“முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை.

wpengine

மன்னார், முருங்கன் பகுதிகளில் நாளை நீர்வெட்டு

wpengine

மகன்கள் இப்படியான பெரிய அழிவை செய்வார்கள் என கனவிலும் நினைத்ததில்லை! இப்ராஹிம்

wpengine