பிரதான செய்திகள்

நாற்காலி மாற்றுத்திறனாளி மைத்திரிபால சிறிசேனவிடம் பல்வேறு கோரிக்கைகள்

இலங்கையை சுற்றி முச்சக்கர நாற்காலியில் பயணத்தை தொடர்திருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை வேண்டியும், மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி கடந்த முதலாம் திகதி குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் இருந்து இலங்கையை சுற்றி முச்சக்கர நாற்காலியில் பயணம் ஒன்றை ஆரம்பத்திருந்தார்.

இந்நிலையில் 13 ஆவது நாளாகிய இன்று குறித்த இளைஞன் முல்லைத்தீவை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவில் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தொடர்பிலும் ஏனைய மாற்றுத்திறனாளிகள் தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்படவேண்டும் என்ற நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிவை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை அவர் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts

மின் வெட்டும் பயங்கரவாத செயல்களும்

wpengine

தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு..!

Maash

முசலி பிரதேசத்தின் பழமையான “மஞ்சக்குளத்து” பள்ளிவாசல் பகுதி புணர்நிர்மானம் செய்யப்படுமா?

wpengine