Breaking
Sat. Apr 27th, 2024

(றிஸ்மீன் BA)

இலங்கை அரசியலில் சிங்களவர்கள் வாக்களித்து முஸ்லிம் பிரதி நிதி பெறுவதும் முஸ்லிம்கள் வாக்களித்து தமிழர் பிரதி நிதியை பெறுவதும் தமிழர்கள் வாக்களித்து முஸ்லிம் பிரதி நிதிகளை பெறுவதுமாக வட , கிழக்கு முஸ்லிம்கள் பெரும்பாலானோர்கள் தமிழ் அரசு கட்சியிலும் வட,கிழக்கு தவிர்ந்த முஸ்லிம்கள் ஐ.தே.கட்சி , சி.சு.கட்சி என்று மூண்று இனங்களுக்கிடையே ஒற்றுமையான இணக்கசூழ் நிலை காணப்பட்டது.

சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்த காலகட்டத்தில் 1977 ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலின் பின்னர் இலங்கையின் எதிர் கட்சியாக தமிழ் ஐக்கிய விடுதலை முன்ன்னி T U L F , அதன் தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் எதிர் கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டார் . இதன் பின்னர் சிங்கள அரசியல் தலமைகள் தமிழ் பேசும் மக்களின் நியாயமான உரிமைகளை புறக்கனிக்கும் வேலைதிட்ட்த்தில் விகிதாசார தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தி நன்கு திட்டமிடப்பட்ட அடக்குமுறைகளுக்கும் புறக்கணிப்புகளுக்கும் தமிழ் பேசும் சமுகம் தள்ளப்பட்டு இதற்கு எதிராக தமிழர்களும் முஸ்லிம்களும் அகிம்சை வழியில் போராடினார்கள்.

தமிழ் பேசும் மக்களின் அகிம்சை வழிபோராட்டத்தை உணர்ந்த அன்றைய அரசு 1985 ஜூலை மாதம் திம்பு நகரில் ஏற்படுத்தப்பட்ட பேச்சுவர்த்தையில் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் தந்தை மருதமுனையை சேர்ந்த மசூர்மவ்லானவும் கலந்து கொண்டார்.பேச்சுவார்த்தை மேசையில்  அமர்வது புதிய  விடயம் அல்ல. பேச்சு வார்த்தை மேசையில் அமர்பவர் அவர்சார்ந்த சமுகத்தின் பிரச்சினைகளை அங்கு கொண்டு செல்லவேண்டும்.திம்பு பேச்சில் தோல்வி கண்ட தமிழ் பேசும் சமுகம் ஆயுத போரட்டத்தை முன்னெடுத்தது.இதன் போது அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட பிரித்தாழும் தந்திரோபாயத்துக்கு   தமிழ் முஸ்லிம் சமுகம் பலியாகியது.முஸ்லிம்களின் உயிர் ,உடமை ,பொருளாதாரம் அழித்தொழிக்கப்பட்டது . 1987 ஜூலை மாதம் இலங்கை – இந்திய உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.இந்த தீர்வு திட்டதில் முஸ்லிகள் முற்று முழுதாக புறக்கணிக்கப்பட்டார்கள்.

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு பல பிரச்சினைகள் காணப்பட்டபோதும் எங்களுடைய பிரச்சினைகளை அடையாளப்படுத்தக்கூடிய ஆவணங்களோ ,அமைப்புகளோ இல்லாத விடயத்தை உணர்ந்த எமது பெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை முஸ்லிம்களின் விடுதலை இயக்கமாக ஸ்தாபித்து தனது 10 வருட பாரளுமன்ற  காலத்தில் முஸ்லிம்களின் சக்தியை இந்த நாட்டுக்கும் முழு உலகுக்கும் எடுத்துகாட்டி முஸ்லிம் சமுகத்தை அழிவிலிருந்து பாதுகாத்து,  12.5% காணப்பட்ட வெட்டுபுள்ளியை 8 % மாக மாற்றி, சிறுபான்மை கட்சிகளுக்கு நன்மைபெற வழிவகுத்தமை ,ஒலுவில் துறைமுகம்,  தீகவாவி காணி பிரச்சினைக்கான தீர்வு, பல ஆயிரம் இழைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு,  பல்கலைகழகம் மூண்று இனங்களும் ஏற்று கொள்ளக்கூடிய தீர்வு திட்டத்தை வரைந்து பாரளுமண்றத்தில் மிக நீண்ட நேரம் உரையாற்றி வரலாற்று சாதனை  என, பல அடுக்கடுக்காக செய்தார்.

மாபெரும் தலைவர் அவர்களின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரசின் புதிய தலைவர் 2001 ஆண்டு சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியில் அமைச்சராக இருந்து கொண்டு  எந்த சமுக நோக்கமும் இல்லாமல், மர்ஹும் அஸ்ரப் அவர்களின் கொள்கைக்கு மாறாக ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சி பீடம் ஏற்ற மறைமுகமாக ஐக்கிய தேசிய கட்சியுடன்  செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையால் அமைச்சு பதவியிலிருந்து தூக்கிவீசப்பட்ட போது முஸ்லிம் காங்கிறஸ் பொதுஜன ஐக்கிய முன்னையுடனான ஆதரவை விலக்கியதால் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிபிடம் ஏறியது. இதன் விழைவாக கெல உறுமைய ,பொதுபல சேனா , சிங்களராவய,போன்ற இனவாத அமைப்புகள் தோற்றம் பெற்று இன்றுவரையும் முஸ்லிம் சமுகத்தை நெருக்குவாரங்களுக்கும்  மத ,கலாச்சார,பொருளாதர,வாழ்விடங்களுக்கும் அச்சுறுத்தல் செய்து கொண்டுயிருக்கின்றார்கள்..
பேச்சு வார்த்தை மேசையில் அமர்வோம் என்று மார்பு தட்டுபவர்கள் 2001 இன் பின்னர் நான்கு தடவைகள் பேச்சுவார்த்தை மேசையை தவறவிட்டுள்ளார்கள்.

2002 டிசம்பர் மாதம் நோர்வையில் மூண்று சுற்று பேச்சு
2003 ஏப்ரல் மாதம் வாசிங்டனில் மீழ் கட்டுமானபணி தொடர்பான பேச்சு
2006 பெப்ருவரியில் ஜப்பான் அனுசரனையுடன் ஜெனிவாவில் பேச்சு
2006 ஜூன் ஒஸ்லோவில் பேச்சு
தமிழ் பேசும் மக்களின் நியாயமான விடுதலை போராட்டம் பிரித்தாழும் தந்திரோபாயத்தால்  மொழியால் ஒன்றுபட்டவர்களை மதத்தால் வேறுபடுத்தி மேற்கொள்ளப்பட்ட வண்முறையால் முஸ்லிம்களின் உயிர்,உடமை,பொருளாதரம்.பள்ளிவாசல்கள்,மத ,கலாச்சார ,சுதந்திரம் வயல் நிலங்கள் அழிக்கப்பட்டு இழக்கப்பட்ட நிலையில் நான்கு பேச்சு வார்த்தைகளையும் தவறவிட்டு சுய நலத்துக்காக அரசாங்கத்துடன் ஒட்டி உறவாடியதை முஸ்லிம் சமுகம் மறக்கவில்லை.

பொத்துவில் வட்டமடு, தொடக்கம் மன்னார், மற்ச்சுகட்டி வரையும் ,தம்புள்ளை தொடக்கம் அழுத்கமை வரை முஸ்லிம்களுகளின் உயிர்,உடமை,இருப்பிடம் பொருளாதரம் ,மத கலாச்சாரம்,வயல் நிலங்கள் என்று பல பிரச்சினைகள் காணப்படுகின்ரபோதும் இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொள்ள உன்மை நிலையை கண்டறிய ஆனைக்குழுகளை நியமித்து விசாரனைகளை மேற்கொண்டு எமது பிரச்சினைகளை வெளிக்காட்டி ,அதை ஆவணப்படுத்தி அரசியல்ரீதியாக முஸ்லிம்களின் விழிப்புணர்வை பெரும்பாண்மையினருக்கு தெரியபடுத்தி அந்த பேச்சுவார்த்தை மேசைக்கு முஸ்லிம்கள் சார்பாக செல்ல இன்னும் ஆயத்தம் இல்லாத நிலையில் தேர்தல் வெற்றிக்காக வெற்று உணர்ச்சி வசனங்களை மக்களிடம் அள்ளி வீசி முஸ்லிம் சமுகத்தை பாதுகாக்க தவறுகின்ன்றார்கள் என்பதில் சந்தேகமில்லை.

வட , கிழக்கு மாகாணங்களில் வடக்கை பொறுத்தவரையில்யாழ்ப்பாணம்.கிழினொச்சி,முலைதீவு,மன்னார்,வவுனிய போண்ற மவட்டங்களில் மூண்று இனங்கள் வாழ்ந்தாலும் தமிழர்கள் பெரும்பான்மைகவுள்ளதால் அங்கு மாவட்ட செயலாளர்கள் தமிழர்களாகவே காணப்படுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் மட்டகளப்பு மாவட்டத்தில்  தமிழர் பெரும்பாண்மையாகவுள்ளதால் மாவட்ட செயலாளரும் ,மேலதிக மாவட்ட செயலாளரும் தமிழராகவேவுள்ளார்கள் ,திருகோணமலை மவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பாண்மை சமுகமாக காணப்பட்டாலும் மாவட்ட செயலாளரும் மேலதிக மாவட்ட செயலாளரும் சிங்களவர்களாகவேவுள்ளார்கள், அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மை சமுகமாக காணப்பட்டாலும் மாவட்ட செயலாளர் சிங்களவராகவும் ,மேலதிக மாவட்ட செயலாளர் மட்டகளப்பை சேர்ந்த கனிஸ்ட உத்தியோகத்தரான தமிழ் சகோதருக்கே வழங்கப்பட்டவேளை தீ யில் முழைத்தது எல்லாம் வெந்தணலில் கருகிவிட்டதா.

உன்மையில் இந்த நாட்டில் முஸ்லிம்கள் தான் அரசியல் அனாதைகள் திருகோணமலையிலும் அம்பாரையிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மை சமுகமாக இருந்தும் அதிலும் ஒரு முஸ்லிம் சீனியராக (சிரேஸ்ட்ர ) உத்தியோகத்தராகவும் தகுதியுடையவராகவும் ஏனைய மாவட்டங்களை போண்று இந்த மாவட்டத்தின் நியமணத்தை அரசுடன் பேசி ஆக குறைந்தது  ஒரு மேலதிக மாவட்ட செயலாளரை கூட பெற்றுக்கொள்ளமுடியாத திராணியற்ற எமது முஸ்லிம் காங்கிறஸ் தலமையினால் எவ்வாறு முஸ்லிம் தனி அலகை பெறமுடியும்.

அம்பாரை மாவட்டத்தில் சுணாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட  வீட்டுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12 வருடமாகியும் பகிர்ந்தளிக்கப்படவில்லை பிரதேச செயலாளர் மட்டத்திலுள்ள இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள் எவ்வாறு முஸ்லிம் தனி அலகை பெறுவார்கள்.

மருதமுனையில் சுமார் 3000 மேற்பட்ட குடும்பங்களின் ஜீவனபாய நெசவு கைத்தறி உற்பத்தி தொழில் பாதிப்பு ,இந்த சமுக பிர்ச்சினையை பாராளுமண்றம் வரை கொண்டு சென்று இந்த மக்களின் பாரம்பரிய பூர்விக தொழிலை காப்பாற்ற முடியாத ஆதவன் எப்போது எழுந்து வந்து  முஸ்லிம் சமுகத்தின் பிரச்சினயை பாதுகாப்பான்.

2012 ஆண்டு பட்டதாரி பயிலுனார்களாக அரச காரியாலங்களில் இணைத்துக்கொள்ளப்பட்ட அனைவருக்கும் நிரந்தர அரச நியமனங்கள் அந்த காலப்பகுதிகளில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.ஆனால் முஸ்லிம் காங்கிறசின் இதயம் அம்பாரை மாவட்டத்தின் கல்முனையிலும் சம்மாந்துறையிலும் பயிலுனராகயிருந்த  எமது சகோதர,சகோதரிகளை நான்கு வருடத்தின் பின்னர் 50 கி.மீ க்கு அப்பால் உகனைக்கும்,பதியதலாவைக்கும்,மகாஒயாவுக்கும் மீண்டும் பயிலுனராக அனுப்பியது கட்சியில் ஆயிரம் விளக்கு இருந்தும்ஒரு விளக்காவது எரிந்து மக்களுக்கு வெளிச்சத்தை கொடுக்கமுடியாத  கற்பனை விளக்காத்தான் காணப்படுகின்றது.

ஒலுவில் ,பாலமுனை மக்கள் பரம்பரை பரம்பரையாக வழ்ந்து வந்த தங்களின் 1000 க்கும் மேற்பட்ட ஏக்கர்  நிலங்களையும் , தங்களின் குடும்பங்களை வாழவைத்த கடல் தொழில் வழங்களையும் இழந்தும் அவர்களின் இழப்புகளுக்கு ஆறுதல் அளிக்க்க்கூடிய அல்லது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய  திட்டங்களோ முன்னடுபுகளோ இதுவரைக்கும் இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்கள் வெந் தணலில் கருகும் நிலையில் கட்சின் வெற்று வசனம் சமுகத்தை தற்கொலைக்கு இட்டு செல்லும்.

1994 காலப்பகுதியில் தீக வாபி காணி பிரச்சினை இந்த நாட்டில் பொளத்த தேரர்களால் பெரும் பூதாகரமானபோது மர்ஹும் அஸ்ரப் அவர்கள் ரி.என்.எல். தொலைகாட்சி சணலில் தேர்ர்களுடன் நேரடி விவாதங்களை மேற்கொண்டு பெரும்பான்மை சமுகங்களுக்கு உன்மையை விளக்கி பிரச்சினையை முழையிலே கிள்ளி எறிந்தார்.

வில்பத்து காணிபிரச்சினை தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிறஸ் தலமை ஹிரு டி.வி.சணலில் தேர்ர்களுடன் நேரடி விவாதங்களை செய்து பெரும்பான்மை சிங்கள சமுகத்துக்கு உன்மையை வெளிக்காட்டி பிரச்சினைகளை முழையிலே கிள்ளி எறிந்தார்.
பொளத்த இனவாதிகளால் தம்புள்ளயில் சிறு பிரச்சினை ஆரம்பித்த போது அன்று பாரளுமண்றத்தில் எட்டு ஆசனங்களை வைத்திருந்த எமது கட்சி சமுகத்துக்காக போரடமல் மொளனமாக இருந்தன் விழைவு அழுத்கமை வரையும் சென்றது.
எனவே தேர்தல் காலங்களில் எங்கள் அரசியல் எதிரிகளை தோல்வியடைய சாணக்கியங்களை மேற்கொள்வதிலும்,தேர்தலின் பின்னர் தேசிய பட்டியல் பிரச்சினைகளை அடுத்த தேர்தல் வரை இழுத்து செல்வதிலும்,கட்சியின் முக்கியஸ்தர்களை திருப்த்தி அடைய வைப்பதிலும் ,வருமானங்களை தேடுவதிலும் காலத்தை கடத்துவோமானல் கிடைத்த சந்தர்ப்பங்களை கைவிட்டு ஏனைய சமுகங்களை குறை கூறுவதில் பயனில்லை.

இவ்வாறு சிறிய விடயங்களை கூட எமது சமுகத்துக்கு பெற்று கொடுக்க முடியதவர்களாக கட்சி வைத்துக்கொண்டு வெற்று கோசங்களையும் அறிக்கைகளையும் மட்டும் விடுவதை கைவிட்டு எதிர்காலத்தில் ஏற்படயிருக்கும் ஆபத்துக்களிலிருந்து எமது சமுகத்தை பாதுகாப்பதற்கான அனையை அமைப்பதற்கு எமது சமுகத்துக்காக அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்று சேர்ந்து முஸ்லிம் தேசிய முன்னனியை உருவாக்கி தீர்வு விடயத்தில் தமிழர்களும் ,முஸ்லிம்களுமாக இணைந்து செயற்பட தவறுவோமானால் முஸ்லிம் சமுகம் 1990 ஆம் ஆண்டை பின்னோக்கி செல்லுவது மட்டுமல்லாமல்  முஸ்லிம் சமுகத்தை தற்கொலைக்கு தயார் செய்த துரோகிகளாக வரலாறு சொல்லும் என்பதில் எவ்விதமான சந்தேகம் இல்லை

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *