Breaking
Sun. Nov 24th, 2024

ஜேர்மனியின் இணைய பாதுகாப்பு அமைப்பு ஒன்று பேஸ்புக், பயனர்களின் தரவுகளில் சிலவற்றை அவர்களது ஒப்புதல் இன்றி சேகரிப்பதற்கு தடை விதித்துள்ளது. The Federal Cartel Office என்னும் அந்த அமைப்பு மூன்று வருட விசாரணைக்குப்பின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மூன்றாவது தரப்பு சேவைகள் மற்றும் இணையதளங்ளிலிருந்து இனி தன் விருப்பம்போல தரவுகளை சேகரித்து பேஸ்புக் பயனர்களின் புரொபைல்களுடன் அவற்றை இணைக்கக்கூடாது என அது உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக இந்த செயல் விளம்பரதாரர்களை அதிகம் ஈர்க்கக்கூடிய செயலாகும். பேஸ்புக் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளதோடு, தேவையின்றி தங்களை இந்த ஜேர்மன் அமைப்பு குறிவைப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது பேஸ்புக் அதன் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் தனது லைக் மற்றும் ஷேர் பட்டன்களைக் கொண்ட மூன்றாவது தரப்பு இணையதளங்களிலிருந்து தரவுகளை சேகரித்து வருகிறது.
ஆனால் ஜேர்மன் அமைப்பு, இந்த தரவுகளை இணைக்கும் வேலை, இனி பயனர்களின் வெளிப்படையான ஒப்புதலின்றி நடக்கக்கூடாது என்று கூறியுள்ளது.

எதிர்காலத்தில் இப்படி பேஸ்புக் தரவுகள் அல்லாத தரவுகளை சேகரித்து பயனர்களின் பேஸ்புக் கணக்குகளுடன் இணைக்க பயனர்களை அது கட்டாயப்படுத்த அனுமதிக்கப்படாது என அந்த அமைப்பின் தலைவரான Andreas Mundt தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கின் இந்த தரவு சேகரிக்கும் முறையால்தான் அது சந்தையில் பெரும் இடத்தைப் பிடித்து விட்டதாகக் கூறும் Andreas Mundt, பயனர்கள், வெளி தகவல்கள் தங்கள் பேஸ்புக் தரவுகளுடன் இணைக்கப்படுவதை அனுமதிக்க மறுக்கும் பட்சத்தில், தனது சமூக ஊடகத்தை பயன்படுத்த பேஸ்புக் மறுக்கக்கூடாது என்றும் கூறினார்.

மூன்றாம் தரப்பு இணையதளங்களிலிருந்து தரவுகளை சேகரிக்க அனுமதியளித்துள்ள அந்த அமைப்பு, தன் இஷ்டம்போல அதை பேஸ்புக் தனது பயனர்களின் புரபைல்களுடன் அவர்களது அனுமதியின்றி இணைக்கக்கூடாது என்று கூறியுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *