பிரதான செய்திகள்

ஊதியம் இன்றி அலுகோசு பதவியை பொறுப்பேற்பதற்கு தான் தயார்

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரைக் கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதித்திட்டம் குறித்து தகவல் வெளியிட்ட ஊழல் ஒழிப்பு படையணியின் வழிநடத்தல் பிரிவு பணிப்பாளர் நாமல் குமார, டுபாயில் கைதுசெய்யப்பட்ட மாகந்துரே மதூஷ் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக ஊதியம் இன்றி அலுகோசு பதவியை பொறுப்பேற்பதற்கு தான் தயார் என நாமல் குமார தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தடுப்புக்காவலின் அடிப்படையில் மாகந்துரே மதூஷிடம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனூடாக வெளிப்படும் அனைத்து தகவல்களும் நாட்டுக்கு வெளியிடப்படுத்தப்பட வேண்டும்.
இதேநேரம், மாகந்துரே மதூஷிற்கும் தமக்கும் எதிர்காலத்தில் ஒன்றாக சிறையில் இருக்கவேண்டிய நிலைமை ஏற்படுமோ என்பது குறித்து தமக்கு தெரியாது என நாமல் குமார தெரிவித்துள்ளார்.

மாகந்துரே மதூஷ் போன்ற குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும்.

இதற்காக அலுகோசு பதவிக்கு பணியாளர் அவசியமாயின் வேதனமின்றி பணியாற்ற தாம் தயார் என நாமல் குமார தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள குப்பை கலாநிதி அஜந்தா பெரேரா

wpengine

தொண்டமான் ஐக்கிய தேசிய கட்சிவுடன் இணையக்கூடிய சாத்தியம்

wpengine

மக்கள் சாலையில் வரிசையில் நிற்கும் போது, கடலில் கப்பல்கள் வரிசையாக நின்றன.

Maash