பிரதான செய்திகள்

பேஸ்புக் விவகாரம்! முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை

ஹொரவபொத்தான – கிரலாகல புராதன விகாரை மீது ஏறி புகைப்படம் எடுத்தமை தொடர்பில் கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்ட எட்டு மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு கெப்பித்திகொல்லாவ நீதிமன்றத்தில் நீதவான் எச்.கே.மாலிந்த ஹர்சன த அல்விஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த மாணவர்களுக்கு எதிராக மதங்களுக்கு இடையில் குளறுபடிகளை ஏற்படுத்தியமை, சட்டவிரோதமான முறையில் ஒன்றுசேர்ந்தமை, தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் நுழைந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இவற்றில், முதலாம் இரண்டாம் குற்றச்சாட்டுகளுக்கு அரச செலவாக தலா 1,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் மூன்றாவது குற்றச்சாட்டுக்கு தலா 50,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும், நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

Related posts

சில முஸ்லிம்களை காப்பாற்றிய சிங்கள பெண்மணி

wpengine

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் அரசியல் பழிவாங்கும் இடமாற்றம்

wpengine

வட்அப் சித்திரவதை! மலேசியாவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்கொலை

wpengine