தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி

பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால், அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்குள் குறித்த மோசடி தொடர்பில் 15 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்று வந்த நிலையில், தற்போது அதிகமாக இடம்பெற்று வருகின்றன.

மக்கள் மத்தியில் சரியான புரிந்துணர்வு இல்லாமையே இவ்வாறான மோசடி இடம்பெற காரணம் என தெரியவருகிறது.

இது தொடர்பில் பொலிஸாரும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அநுர அலை குறையவில்லை! வடக்கு – கிழக்கு மாவட்டங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும்.

Maash

உலக மது ஒழிப்பு தின பிரதான நிகழ்வு, ஜனாதிபதி தலைமையில்

wpengine

“மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசு துரோகிகள்” மாவை மகனிடம் விசாரணை. !

Maash