பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் கத்தியால் காயப்படுத்தி பணம் கொள்ளை

கிளிநொச்சியில் பெண் ஒருவரை கத்தியால் காயப்படுத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி அம்பாள்குளத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பூநகரியில் உள்ள ஒருவ­ருக்கு வழங்க வேண்டிய பணத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்­றுள்ளார். அவரைத் திடீரென வழிமறித்த இருவர் அவரிடம் இருந்து பணப் பையைப் பறிக்க முயன்றுள்ளனர். அவர் அதைத் தடுக்க முயன்றபோது கத்தியால் குத்தி­விட்டு பணத்தை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் 19 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளதாக பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

வயிற்றுப் பகுதியில் இரு தடவைகள் கத்­தியால் குத்திவிட்டு, கொள்ளையிட்டவர்­கள் கத்தியை அவரது வயிற்றில் சொருகியவாறு விட்டு தப்பிச் சென்­றுள்ளனர்.

வயிற்றில் கத்தி குத்தப்பட்ட நிலையில் வீதியில் விழுந்து கிடந்த பெண்ணை அந்­தப் பகுதியால் வந்த மீன் வியாபாரி ஒரு­வர் அவதானித்துள்ளார். அவர் உடனடியாக நோயாளர் காவு வண்டிக்கும், பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்­ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட பெண்ணை கிளி­நொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசா­ரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“மஹிந்த ராஜபக்ஷ ஒரு பிராண்ட் என்று அரசாங்கம் நம்புகிறது”. நானும் என் தந்தையும் பயப்படவில்லை.!

Maash

மாகாண சுகாதார அமைச்சருக்கு அறிவித்தல் இல்லை! சபையில் குழப்பநிலை

wpengine

வட மாகாண சமஷ்டி யோசனை சுவிஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது சிங்கள பத்திரிக்கை

wpengine