பிரதான செய்திகள்

பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் தயாரில்லை

தேசிய அரசாங்கத்தை மீண்டும் அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், அடுத்த ஜனாதிபதித் தேர்தல்வரை நிலையான ஆட்சியை முன்கொண்டுசெல்லும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக திட்டமிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனோ இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கம் தமக்கு இல்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டீ.லால்காந்த நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய அரசாங்கம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் தற்போதுவரை எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் தொடர்பிலோ அல்லது புதிய அரசியலமைப்பு தொடர்பிலோ கட்சி என்ற அடிப்படையிலேயே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிரதமர் நரேந்திர மோடியை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்துள்ளார்.

Maash

கள அலுவலர்கள் ,பல அரச நிறுவனங்கள் அத்தியாவசிய சேவைகள்.

wpengine

சவோய் திரையரங்கிற்கு அருகே இந்த வெடிப்பு சம்பவம்

wpengine