உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

51வயதில் ஒரே! பிரவசத்தில் நான்கு பிள்ளைகள்

தனது 51 ஆம் வயதில் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த பிரித்தானிய தாயார் தமது அன்றாட வாழ்க்கை குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
வடக்கு லண்டனில் குடும்பத்துடன் குடியிருக்கும் 51 வயது ட்ரேசி பிரிட்டென் என்பவரே தற்போது ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார்.

ஏற்கெனவே 3 பிள்ளைகளுக்கு தாயாரான ட்ரேசிக்கு 8 பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

தமது 39-வது வயதில் 19 வார கர்ப்பம் தவறிய பின்னர் தற்போது செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிள்ளை பெற்றுள்ளார்.

இதற்கென 7000 பவுண்டுகள் செலவிட்டதாக கூறும் ட்ரேசி, தமது பிள்ளைகளுக்காக வாரம் 224 போத்தல் ஃபார்முலா பால் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வாரம் 28 முறை குளிப்பாட்டுவதாகவும் 56 தடவை உடை உடுத்தி விடுவதாகவும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போதெல்லாம் தாம் வெறும் 3 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும், ஆனால் இது சில காலம் மட்டுமே என்பதால் அதுபற்றி கவலைப்படுவதில்லை எனவும் ட்ரேசி தெரிவித்துள்ளார்.

தாய்மையை தற்போது தாம் ரசிப்பதாகவும் முழு நேர தாயாராகவே மாறியுள்ளதாகவும் ட்ரேசி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சட்டம், ஒழுங்கு உறுதி செய்வதற்கு பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம்.

Maash

அமைச்சர் டக்ளஸ்சின் கவனத்திற்கு மன்னார்-கொக்குபடையான் மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல்! 14 இளைஞர் யுவதிகள் வேட்புமனுத்தாக்கல்

wpengine