பிரதான செய்திகள்

வவுனியா, புதிய பேருந்து நிலையத்திற்கு எதிராக சுவரொட்டிகள்

வவுனியா, புதிய பேருந்து நிலையத்திற்கு முன் இயங்கும் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வவுனியா நகரின் பல பாகங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டிகள் புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியின் இளைஞர்களினால் நேற்று இரவு ஒட்டப்பட்டுள்ளது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மதுபானசாலையை உடன் அகற்று, வவுனியா புதிய பஸ் நிலையத்தில் மதுபானசாலை வேண்டாம், வவுனியா புதிய பஸ் நிலையம் மதுபான பிரியர்களின் உல்லாச இடமாகுமா?, வவுனியா அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக மதுபானசாலை அவசியமா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன.

Related posts

திறைசேரியால் இதுவரை பணம் செலுத்தப்படாத நிலையில் தேர்தல் சாத்தியமில்லை! -சாந்த பண்டார-

Editor

பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட முப்படைகளுக்கும் நன்றிகளை தெரிவித்த ஜனாதிபதி ரணில்

wpengine

பதிவாளர் நியமனத்தை வழங்கி வைத்த பிரதமர்! வத்தளை பதிவாளர் நியமனம்

wpengine