புத்த மத வரலாற்று சின்னங்களை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரலாற்று தொன்மை மிக்க, அனுராதபுரத்தில் அமைந்துள்ள கிரலாகல தூபி மீது ஏறி நின்று இளைஞர்கள் சிலர் புகைப்படம் எடுத்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் கிரலாகல தொல்பொருள் வனப்பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்த சிலர் இந்த புகைப்படங்களில் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞர்களின் செயற்பாடு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, குறித்த ஏழு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.