Breaking
Mon. Nov 25th, 2024

ஆங்கிலேயர் கால ஆட்சியிலிருந்து பயன்படுத்தப்படும் மிக பழமையான வரலாற்றைக்கொண்ட சிங்கள,தமிழ்,முஸ்லிம், கிறுஸ்தவ அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய குருணாகல் மாநகரசபை மல்கடுவாவ பொது மயானத்தின் முஸ்லிம் மையவாடி பிரதேச அபிவிருத்தியின் ஆரம்ப கட்டமாக ,நீண்ட கால பிரச்சினையான இரவு நேரங்களில் வெளிச்சமற்ற காரணத்தால் முஸ்லிம் மையத்துகளை அடக்கம்

செய்வதற்க்கு முடியாத அசௌகரியங்களுக்கு தீர்வாக புதிதாக 6 மின்கம்பங்களை பொருத்தும் வேலை அஇமகா குருணாகல் மாநகரசபை உருப்பினரும் மாவட்ட யூத் காங்கிரஸ் அமைப்பாளருமான தேஷமான்ய கௌரவ அஷார்தீன் மொய்னுதீன் அவர்களினால் ஆரம்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டது.

இதற்கடுத்தக் கட்டமாக மையவாடி பிரதேசத்தில் நீர் வசதி உட்பட பல அபிவிருத்திகளை கௌரவ அஷார்தீன் அவர்களினால் மேற்கொள்ள தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வேலைத்திட்டத்தினை பார்வையிட மாநகரசபை பிரதம பொறியியலாளர் நாலக்க பண்டார , தொழில்நுட்ப அதிகாரி கோனார, பொது மயான பொருப்பாளர் ரோகன , மாநகரசபை மின் தொகுதி விஷேட நிபுனர்களுடன் வெஹெர சியாம் ஹாஜி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் வேலைத்திட்டம் ஆரம்பிக்கடுமென அதிகாரிகள் அஷார்தீன் அவர்களுக்கு உறுதியளித்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *