இலங்கையில் 25 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் தேசிய பொருளாதர கொள்கை தேசிய பயிலுனர் கைத்தொழில், இளைஞர் விவகார அமைச்சினால் மாணவர்களை தெரிவு செய்து பயிற்சி நெறிகளில் இணைக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.
குறித்த நிகழ்வு மன்னார் மாவட்ட தலைமை அதிகாரி எஸ்.வீனஸ் தலைமையில் நகர சபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் வாகனத்துறை , சுற்றுலாத்துறை மற்றும் சுகாதாரத்துறை, கட்டுமாணத்துறை என பல் துறைகளில் பயிற்சிகளை பெற தகுதியுள்ள மாணவர்களை நேர்முக தோர்வு மூலம் தெரிவு செய்து அவர்களுக்குரிய தகுதிகளின் அடிப்படையில் பயிற்சி நெறிகளை தொடரும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டத்தின் வெற்றிக்கமைய இவ்வருடம் குறித்த செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வானது இலங்கை முழுவதும் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் , சிறப்பு விருந்தினராக மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய சிரேஸ்ட முகாமையாளர் கார்திக்கா நிரங்சன், மற்றும் தேசிய பயிலுனர் கைத்தொழில் அதிகார சபையின் திட்டமிடல் பணிப்பாளர் றொஹான் ரொட்றிகோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது தொழில் பயிற்சி நெறிகளின் முழுமையான விளக்கம் மற்றும் நிகழ்வுகளும், விரைவில் பயிற்சி நெறிகளை ஆரம்பிக்க இருக்கும் 200 இளைஞர் யுவதிகளை வரவேற்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
குறித்த பயிற்சி நெறிகளை முழுமையாக நிறைவு செய்பவர்களுக்கு தேசிய ரீதியில் சான்றிதல்களுடன்,புதிதாக தொழில் தொடங்குவதற்கு 5 இலட்சம் ரூபாய் கடன் உதவியும் வழங்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.