பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனை மக்களின் காணியினை பெற்றுக்கொடுத்த ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

அம்பாறை – அட்டாளைச்சேனை, அஸ்ரப் நகர் கிராம சேவகர் பிரிவின் பல்லகாடு கிராமத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட இருந்தது.
இந்த நிலையில் குறித்த செயற்பாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இடை நிறுத்தியுள்ளார்.

எதிர்வரும் இரு வாரங்களில் குறித்த பகுதிக்கு தாம் விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய பின்னரே இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என மாகாண காணி ஆணையாளருக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த காணியானது அப்பிரதேசத்தைச் சேர்ந்த 69 குடும்பங்களின் பூர்வீக காணி எனவும், அதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருகிறது எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடும் காற்றினால் கிண்ணியாவில் 12 வீடுகளுக்கு சேதம்

wpengine

பெற்றோலுக்கு முற்பணம் செலுத்தப்பட்டது!டீசல் துறைமுகத்தில் அமைச்சர்

wpengine

அரசாங்கத்திற்குள் புலிகள் வட – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை- அஸ்வர்

wpengine