Breaking
Sun. Nov 24th, 2024

பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் விவரங்களை விற்பனை செய்ய திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் அதன் பயனர் விவரங்களை விற்பனை செய்ய சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டு, பின் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2012 ஆம் ஆண்டு பேஸ்புக் ஊழியர்கள் விளம்பர நிறுவனங்களுக்கு பயனர் விவரங்கள் அடங்கிய கிராப் ஏ.பி.ஐ. இயக்க 2,50,000 டொலர்கள் கட்டணமாக நிர்ணயம் செய்ததாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கின் கிராப் ஏ.பி.ஐ. பயனரின் முக்கிய விவரங்கள் அடங்கிய தொகுப்பு ஆகும்.

பின்னர் 2014 ஏப்ரல் மாதத்தில் பேஸ்புக் நிறுவனம் கிராப் ஏ.பி.ஐ. இயங்கும் முறையை மாற்றியமைத்தது. ஜூன் 2015 இல் பேஸ்புக் ஏற்கனவே வழங்கி வந்த சில விவரங்களை இயக்குவதற்கான அனுமதியை ரத்து செய்ததாக தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர் விவரங்களை இயக்க விளம்பர நிறுவனங்களுக்கு அதிகளவு கட்டணம் நிர்ணயம் செய்வது பற்றி பேஸ்புக் ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

பேஸ்புக் தரப்பில் கிராப் ஏ.பி.ஐ. வெர்ஷன் 1 இயக்குவதற்கான அனுமதி பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பயனர் விவரங்களை சேகரிக்க அவர்களது லொகேஷன், அவர்களின் குறுந்தகவல் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை டிராக் செய்து பேஸ்புக் அவற்றை மற்ற நிறுவனங்களுக்கு வழங்கியதாக கார்டியன் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *