Breaking
Mon. Nov 25th, 2024

சவூதி அரேபியாவில் இருந்து வெளியேறி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த இளம்பெண்ணுக்கு கனடாவின் டொராண்டோ விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சவுதியை சேர்ந்த ரஹப் முகமது அல்-குனுன் என்கிற 18 இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு, வீட்டில் அடைத்து வைத்து தன்னை பெற்றோர் கொடுமைப்படுத்துவதாகா கூறி நாட்டை விட்டு வெளியேறினார்.

குவைத்திலிருந்து பாங்காக் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முயன்றபோது, போதிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி தாய்லாந்து அதிகாரிகளால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

சவுதிக்கே அவரை திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தந்தை மற்றும் சகோதரரையும் சந்திக்க மறுப்பு தெரிவித்த ரஹப், அங்கு சென்றால் தன்னை கொன்றுவிடுவார்கள் எனக்கூறி அவுஸ்திரேலியாவில் தனக்கு அடைக்கலம் கொடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஐநா சபையின் கோரிக்கையை ஏற்று அடைக்கலம் வழங்குவதாக அறிவித்தார்.

அதன்பேரில் தாய்லாந்து அதிகாரிகளும் ரஹப்பை கனடாவிற்கு வழியனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ரஹப், டொரொன்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட், பூங்கோத்து கொடுத்து வரவேற்றார்.

அப்போது ரஹப், ஒரு பாவாடை, சிவப்பு நிறத்தில் “CANADA” என்ற வார்த்தை கொண்ட ஒரு சாம்பல் ஹூட் மற்றும் (UNHCR) ஐ.நா. அகதிகள் நிறுவனம் லோகோ தாங்கிய ஒரு நீல தொப்பி அணிந்து வந்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஹப், என் வாழ்க்கையை ஆதரிப்பதற்காக மக்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். உண்மையிலேயே நான் இந்த அன்பையும் ஆதரவையும் பற்றி ஒருபோதும் கனவு கண்டதில்லை. இது என்னை ஒரு நல்ல மனிதனாக ஊக்குவிக்கும் தீப்பொறியாகும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையம் வந்தடைந்த பிறகு இளம்பெண்ணை கையால் அணைத்தவாறு செய்தியாளர்களிடம் பேசிய கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர், இது ரஹப் முகமது அல் குனுன், ஒரு துணிச்சலான புதிய கனடியன் என தெரிவித்தார்.

மேலும் தற்போது ரஹப் விமான பயணக் களைப்பில் சோர்வாக இருப்பதால் பிறகு பேசலாம் எனக்கூறி அனுப்பி வைத்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *