பிரதான செய்திகள்

மன்னார்,வங்காலையில் கோடி ரூபா பெறுமதியான கஞ்சா பொதி

மன்னார், வங்காலை கடற்பகுதியில் வைத்து இன்று அதிகாலை சுமார் ஒரு கோடி 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த கஞ்சா பொதிகளை வைத்திருந்த நபரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட 184.2 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா பொதிகளுடன் கைது செய்யப்பட்ட நபர் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட இனவாத வன்செயல் துருக்கி தூதுவரிடம்

wpengine

சோபித தேரரின் மரணம் குறித்து சீ.ஐ.டி. விசாரணை ஆரம்பம்!

wpengine

கல்வி தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் உடன்படிக்கை

wpengine