சகல தரப்புக்களுடனும் இணைந்து வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யப் போவதாக வட மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
வடக்கின் ஆளுநராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், தேசிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் இந்த தகவலை வெளியிட்டார்.
என்மீதான நம்பிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி இந்த பொறுப்பினை என்னிடம் கொடுத்துள்ளார். இதன் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் வேறுபாடுகள் இன்றி ஒரு சேவகனாக பணியாற்றுவதே எனது நோக்கம்.
முழு இலங்கை மக்களின் அபிவிருத்தி, ஒற்றுமைக்காக பாடுபட வேண்டிய தேவை எனக்குள்ளது.
வட மாகாணம் என்பது தனிப்பட்ட பகுதியல்ல, எனினும் அங்கு பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. முன்னாள் ஆளுநர் மேற்கொண்ட பணியை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
அந்தப் பகுதியிலுள்ள அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.