Breaking
Sun. Nov 24th, 2024

சிங்கள இளைஞர்கள் நால்வரை மடுவில் உள்ள மக்கள் நையப்புடைத்த சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள வீடுகளிற்கு சென்று அநாதை குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதாக கூறி, மக்களை மிரட்டியும் நிதி வசூலித்தவர்கள் தாம் அனுராதபுரம் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்டனர்.

இந்நிலையில் சிங்கள இளைஞர்கள் நால்வர் குறித்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்து இன்று (7) நையப்புடைத்துள்ளனர்.

சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற அப்பகுதி கிராம நிலதாரி நடந்த சம்பவத்தை கேட்டறிந்ததுடன், மடு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த பொலிஸார் அவர்களை காப்பாற்றும் விதமாக செயற்பட்டதுடன் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொது மக்கள் அப்பகுதி ஊடகவியலாளருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அப்பகுதிக்கு சென்ற அவர் செய்தி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

இதனை அவதானித்த மடு பொலிஸார் இங்கு எல்லாம் புகைப்படம் எடுக்க கூடாது, நீங்கள் யார் என கடுந்தொனியில் மிரட்டியுள்ளனர்.

இந்தநிலையில் நான் ஒரு ஊடகவியலாளர் என அடையாள அட்டையை காட்டிய பின்பும் அவரை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததுடன், அவரின் பேர் மற்றும் புகைப்படங்களை சேகரித்து சென்றனர்.

மடு பொலிஸாரின் குறித்த செயற்பாடு தொடர்பில் மடு பொலிஸ் நிலைய அதிகாரி (O.I.C) ராஜபக்ச குறித்த ஊடகவியலாளர் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளதுடன், மடு பொலிஸாருக்கெதிராக மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றும் வழங்கவுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *